சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்
CONTENTS
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்
சுற்றுசூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம், நீர், காற்று) பாதிக்கப்பட்டு இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர்.
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்
நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என எல்லா பாட பிரிவுகளில் கற்றல் செயலாக இணைப்பதன் மூலம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்துத் தடத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இம்முறை உதவும் என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்து இதனை நடைமுறைப்படுத்தும் அம்சங்களையும் கல்வியில் புகுத்தியுள்ளனர். ஆகவேதான் சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியமாகிறது.
சுற்றுசூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கையைப் பேணிக் காப்பதோடு கற்பித்தல் - கற்றல் இந்த இரண்டு முறைகளிலும் தொலைநோக்கும் பார்வையுடன் செயல்பட்டால் தான் முழுமை பெற்று வருங்காலத் தலைமுறையினர் ஆற்றலோடும், ஆளுமையோடும், உயர்வோடும், உரிமையோடும் தலை நிமிர்ந்து வாழ முடியும். இதனை நடைமுறைப்படுத்தும் கல்வி மிக மிக அவசியம். வருங்காலத் தலைமுறைக்கு கல்வியின் வழிச் சுற்றுச் சூழலை போற்றிப் பேணுவோம்.
Comments
Post a Comment