கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்

கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்
CONTENTS
தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன?
கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு
வானொலி, தொலைக்காட்சி - கல்விக்கு எப்படி உதவிகரமாக இருக்கின்றன?
கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன?
தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா?
உங்கள் பள்ளிக்கு தேவையான சரியான தொழில்நுட்பக் கருவிகளை தேர்ந்தெடுப்பது, கல்வி மேம்பாட்டிற்கு, தகவல் தொடர்பு நுட்பங்களை (ICT) பயன்படுத்துவதின் முக்கிய படி.  இந்தப்பிரிவில், கல்விமுறையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன?
வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம் பிறருக்கு அணுப்புதல், சேமித்தல், புதிதாக உருவாக்குதல், வெளிப்படுத்துதல், பரிமாறிக் கொள்ளுதலே - தகவல் தொடர்பு நுட்பம் என்பதாகும். இந்த நுட்பத்தில் வானொலி, தொலைக்காட்சி, படக்காட்சி, டி.வி.டி., தொலைபேசி, (தொலைபேசி,  மொபைல்) செயற்கைக் கோள், கணிணி மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் ஆகிய  அனைத்தும் அடங்கும். மேலும், படக்காட்சி மூலம் கலந்தாய்வு, இமெயில், பிலாக்ஸ் உள்ளிட்ட கருவிகள், சேவைகளும் இதில் அடங்கும்.
தகவல் பரிமாற்ற காலத்திற்கு தகுந்தார்போல் கல்வியை வழங்க, நவீன தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம்.  இதற்கு கல்வியாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் தொழில் நுணுக்கங்கள், பயிற்சி, நிதி, கட்டிமானத் தேவைகள் போன்றவற்றில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும். புது மொழியை கற்றுக் கொள்வதைவிட, புதுமொழியில் கற்பிப்பது போன்று, இது பலருக்கு சிரமமான பணிதான்.
இந்த பகுதியில், நாடுகளை இணைக்கும் செயற்கைக் கோள்கள் முதல் வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்தும் கணிணி வரையிலான இயந்திரங்களை நாம் பார்க்கப் போகிறோம். கல்வியாளர்கள், கொள்கை முடிவெடுப்போர், பாடதிட்டம் வகுப்போர், போன்ற பலருக்கு இவை பயன்படும் என்று கருதுகிறோம்.
கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு
பொதுவாக, கல்வியில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்துவத்தை அனைவரும் அறிவர். ஆனால், தகவல் தொடர்பு நுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு  மற்றும் அதன் முழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றன.
பயன்படும் தொழில்நுட்பங்கள்
உலகளவில் தொழில் நுட்ப பயன்பாட்டின் அனுபவங்களைப் பார்க்கும் போது,  பெரும்பாலும் அவை கீழ்கண்ட தலைப்புகளுள் அடங்கும்
பல்வேறு ஊடகங்கள் மூலம் கற்றல்
கல்வித்தொலைக்காட்சி
கல்வி வானொலி
இணையதளம் மூலம் ஆலோசனை வழங்குதல்
நூலகங்கள் மூலம் ஆராய்தல்
அறிவியல் தொழில்நுட்பத்தில் செயல்முறைகள்
ஊடகங்களின் பயன்பாடு
இளம் குழந்தை வளர்ச்சி,  குறைந்தளவு மக்கள்தொகை உள்ள இடங்களில் கல்வி, முதியோர் கல்வி, பெண்கல்வி, வேலைத்திறனை அதிகரித்தல் ஆகிய பகுதிகளில் தகவல் தொடர்பு நுட்பங்கள் குறிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிரியர்களை தயார் செய்யவும்,  அவர்களது பணிக் காலத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுட்பங்கள்.
கொள்கைளைத் திட்டமிடல், உருவாக்குதல், புள்ளி விவரங்கள் பராமரித்தலுக்கான நுட்பங்கள்.
பள்ளிகள் பராமரிக்கத் தேவையான நுட்பங்கள்.
இன்றைய நுட்பங்கள்
கல்வி கற்றலுக்கு பயன்படும் நுட்பங்கள் குறித்த ஆய்வில், கீழ்கண்ட நுட்பங்கள் அடங்கும்
கற்பிக்கும் உபகரணங்கள்
ஆடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
மென்பொருள், பொருளடக்கம்
இணைக்கும் முறைகள்
ஊடகம்
கல்வி சம்பந்தப்பட்ட இணையதளங்கள்.
நாளைய நுட்பங்கள்
முடிவெடுப்போர், பயன்படுத்துவோரின் எண்ணங்களுக்கேற்ப, எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு - என்ன இருக்கிறது என்பது மட்டுமல்ல, என்னவரும் என்பதை எதிர்நோக்கியும் புதிய, தேவையான தொழில்நுட்பங்கள் பற்றி சுருக்கமாக இப்பகுதியில் பார்க்கலாம்.
வானொலியும் தொலைக்காட்சியும்
20ம் நூற்றாண்டின் தொடக்ககாலத்திலிருந்தே கல்வித் துறையில் வானொலியும் தொலைக்காட்சியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் மூன்று வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நேரடியாக பாடம் எடுத்தல் - வானொலி மூலம் கற்பித்தல் கலந்தாய்வுசெய்தல், தொலைக்காட்சியிலும் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுதல்
பள்ளிக்கல்வி ஒலிபரப்பு - வேறுவிதமான பயிற்றுவிக்கும் வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் வானொலிக்கல்வி ஒலிபரப்பு பயிற்றுவித்தலுக்கு உதவிகரமாக இருக்கிறது.
பொதுவான கல்வித்திட்டங்கள்/நிகழ்ச்சிகள் - இவை அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கல்வியை வழங்கி வருகிறது.
வானொலி மூலம் கற்பித்தல் மற்றும் கலந்தாய்வு செய்தலில்,  தினமும் வகுப்பறையில் பாடங்கள் ஒலிபரப்பப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்

கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறை