Posts

அதிகாலை

அதிகாலை கதிரவனைக் கண்டவுடன் கரைந்தோடக் காத்திருக்கும் பனித்துளி💥 உதிரம் உருக்கி வயல் உருவாக்க ஏர்தூக்கிச் செல்லும் உழவர்👣 உலர்ந்திடாத முடி கொண்ட கொண்டையுடன் கோலம் போடும் பெண்கள்💇 அலர்ந்தது சிவத்திற்கா, சவத்திற்கா என்று தெரியாமல் பூத்திருக்கும் ரோஜாக்கள்🌹 உதிர்ந்து விடுவோம் பெண் மேக கூந்தலேறி என தெரிந்தும் வான் மேகம் நோக்கி சிரிக்கும் பூக்கள்🌸🌸 குதிர் மேலிருந்து கூவி ஊரை எழுப்பும் சேவல்கள்🐓🐓 கதிர் ஒளியில் குஞ்சுகளுக்கு இரை தேட சங்கீதம் பாடி பறந்து போகும் பட்சிகள்🐧🐧🐧 இந்த அதிகாலை வேளை சந்தோஷங்கள் எவ்வேளையும் கிடைத்தால் மனம் மகிழுமே🙏🙏🙏

தேன்

தேன் தேனீக்கள் தந்த தெவிட்டாத திரவியமே நினைக்கும்போதே இனிக்கின்றநிலையான அமுதே மருத்துவகுணம் கொண்ட மகத்தான பொருளே மலருக்குள் மறைந்திருக்கும் மன்மத இரகசியமே....

நதிகளை இணைப்போம்

நதிகளை இணைப்போம் நதிகளை இணைப்போம் நாட்டை பசுமை ஆக்குவோம் நாலாயிரம் தலைமுறைகள் நன்றாக சொல்லி கொள்கிறோம் நடப்பதில்லையே பூனைக்கு மணி கட்டுவது யாரு புதிய பாரதம் படைப்பது யாரு புதியவருக்கு வாக்கு அளிப்பது யாரு...

வெற்றி

வெற்றி வாழ்க்கை என்ற வட்டத்திற்குள் ஒளிந்து வாழும் மனிதனே , இன்னும் எத்தனை காலம் தான் இப்படி வாழ வேண்டும் என்ற யோசனை ??? வட்டத்திற்கு வெளியே கொஞ்சம் பார், நீ வாழ்கையில் சந்திக்க வேண்டியவை இன்னும் எத்தனை என்பது தெளிவாய் உனக்கு புரியும் ..... சுவருக்குள் அடைந்து கிடப்பது வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி சாதனை படைப்பது தான் சிறந்த வாழ்க்கை .... சாதித்த மனிதர்கள் சோதனையை சாதனையாக மாற்றியவர்கள் .... சிந்தித்து பார் .... சாதனைகளை நிகழ்த்த வயது ஒரு தடை இல்லை என்பது நன்றாக விளங்கும் .... சோதனைகளை கண்டு துவண்டு போக மனிதன் பிறக்க வில்லை .... அந்த சோதனைகளை சாதனையாக மாற்ற பிறந்தவனே மனிதன் .... அடிமேல் அடி எடுத்து வை ... நம்பிக்கையுடன் போராடு சாதனை கூட ஒரு நாள் உனது தோள் மீது அமர்ந்து இருக்கும் .... நீயும் இருப்பாய் சாதனையாளர் பட்டியலில் .... விடா முயற்சியோடு போராடு வெற்றி என்றும் உன் பக்கமே .....

உலக சாதனை

உலக சாதனை பதினேழு வயதில் நோபல் பரிசு ஆயிரம் கின்னஸ் சாதனைகளும் அதற்கு இணையாகாது கும்பலைக் கூட்டி உயிருக்கு இணையான நேரத்தை விளம்பரத்தோடு வீணடித்து கின்னஸ்சில் இடம்பெறும் சாதனைகளால் யாருக்கும் எந்தவிதப் பயனுமில்லை. சின்னப்பெண் மலாலாவின் சிந்தனைபோல் வளர்ந்தவரின் சிந்தையிலும் உதிக்கவேண்டும் நேரத்தைக் கொள்ளையிடும் வேடிக்கையை இனிமேலும் செய்யாதீர் வாடிக்கையாய் சமுதாயம் முன்னேற வழிகாட்டும் சாதனைகள் படைத்திட விழித்தெழுவீர்!

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அப்துல் கலாம் இந்தியத் தாயின் முகம். இந்தியாவின் முகவரி. நம் நாட்டின் வடக்கே இமயமலை கிழக்கே அப்துல் கலாம். நடமாடிய விஞ்ஞானம் தந்தை தெரஸா இந்தியாவின் ரியல் சூப்பர் ஸ்டார். இந்தியாவை தலைநிமிரச் செய்த இமயத் தமிழன். மனித நேயம் மிக்க மகத்துவ தேசத்தை மண்ணில் சமைக்க சுற்றிச் சுழன்ற மனிதத் தேனி. அவர் உள்ளத்தில் முளைத்த ஏவுகணை விண்ணைத் துளைத்தது. நெருப்பை - இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏற்றிய நெம்புகோல். வல்லரசு விதை மண்ணில் விழுந்திருக்கிறது. விரைவில் அக்னிச் சிறகு முளைத்து அகிலம் போற்றும் வல்லரசு விருட்சம் வளரும். அதற்கு இந்தியனாய்த் தோள் கொடுப்போம். துணை நிற்போம். கேப்டன் யாசீன்.

துணிந்து வாழ்

துணிந்து வாழ் நம்மை ஒதுக்கியவர்களுக்கும், ஒதுக்குபவர்களுக்கும் முதலில் நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்கள் ஒதுக்கியதால் தான் நாம் தனித்துவம் விளங்குகிறோம். இன்று அஸ்தமித்த சூரியன் நாளை உதிக்கும் என்பதை மறவாதே! கடந்து கொண்டே இரு. யார் வென்றாலும் தோற்றாலும் பூமி நிற்காது என்பதை புரிந்து கொள். உன்னுடைய தனித்துவ பாதையில் நடைபோடு. விதியென்று நொந்து கொள்ள எதுமில்லை. மதி கொண்டு வெளியே வா. மயக்கம் தவிர்த்து நல்மதி கொண்டு போராடு. உன் வாழ்க்கை என்றும் உன்னோடு. அதோடு எதற்கு தகராறு? பழி உணர்வை அழித்திடு. பசியைப் போக்க உணவை அளித்திடு. ஒவ்வொரு நொடியும் கொண்டாடு. நட்சத்திரங்களைப் போல் இருந்தாலும் வானத்தின் அங்கமாய் ஒளிர்ந்திடு. மனதின் அளவை விரித்திடு. புன்னகை சிந்த தயங்காதே. புத்தொளி பிறக்கும் மறவாதே. ஞமிறுகளின் சொற்களை காதில் வாங்காதே. சூரியனை உன் வழிகாட்டியாக்கிடு. குளிர் சந்திரனும் துணைவருவான். இருளெங்கும் நீங்கும் ஒளி உன்னிலிருந்து பரவட்டும். புது உலகத்தில் நாளைய தலைமுறை ஆனந்தமாய் வாழட்டும். நீ கவனம் கொண்டால் முடியாது எதுவுமில்லை. துணிவை தாரக மந்திரமாக்கு. உன் துணிவ