கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது. இந்த உத்திகள் பகுதியளவில் கற்பவரின் இயல்பின் அடிப்படையிலும், பகுதியளவில் கற்பிக்கப்படும் பாடப்பொருளின் அடிப்படையிலும். அமைந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறை பொருத்தமானதாக மற்றும் செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அது கற்பவரின் தன்மையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். கற்பவரின் இயல்பிற்கும், பாடப்பொருளின் தன்மைக்கும் ஏற்ப கற்பித்தல் முறைகள் வடிவமைக்கப்படவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவும் வேண்டும். [1] இன்றைய பள்ளிகள் பகுத்தறிதலை ஊக்குவிக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும் செய்கிறது. கற்பிப்பதற்கான அணுகுமுறைகள் பொதுவாக ஆசிரியர் மைய முறையாகவும் மாணவர் மைய முறையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன .ஆசிரியர் மைய முறையில் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை மெளனமாக கேட்டு கற்றலில் ஈடுபடுவர்.ஆசிரியர்கள் மைய கற்பித்தல் அணுகுமுறையில், ஆசிரியர்கள் அதிகார மையங்களாக விளங்குகிறார்கள். தேர்வு (Test) மற்றும் மதிப்பீட்டின் (Evaluation)
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் CONTENTS சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம், நீர், காற்று) பாதிக்கப்பட்டு இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர். சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும். கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என எல்லா பாட பிரிவுகளில் கற்றல் செயலாக இணைப்பத
கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் CONTENTS தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன? கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு வானொலி, தொலைக்காட்சி - கல்விக்கு எப்படி உதவிகரமாக இருக்கின்றன? கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன? தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா? உங்கள் பள்ளிக்கு தேவையான சரியான தொழில்நுட்பக் கருவிகளை தேர்ந்தெடுப்பது, கல்வி மேம்பாட்டிற்கு, தகவல் தொடர்பு நுட்பங்களை (ICT) பயன்படுத்துவதின் முக்கிய படி. இந்தப்பிரிவில், கல்விமுறையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன? வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம் பிறருக்கு அணுப்புதல், சேமித்தல், புதிதாக உருவாக்குதல், வெளிப்படுத்துதல், பரிமாறிக் கொள்ளுதலே - தகவல் தொடர்பு நுட்பம் என்பதாகும். இந்த நுட்பத்தில் வானொலி, தொலைக்காட்சி, படக்காட்சி, டி.வி.டி., தொலை
Comments
Post a Comment