பிரபஞ்சம்
பிரபஞ்சம்
பிரபஞ்சம்
யாதெனினும்
யாதொருவர்
யாதும் அறிவார்
யாயினும் அவர்
யாதும் அறியார்
கோள சதுர வட்ட மெனும்
கோள் வடிவம்
இவையெனவே
பல நிறம் பூசி பூசி
கற்பணை கட்டவிழ்ப்பார்
உண்மையை விட்டொழிப்பார்
ஆதி அந்தம் அரிவாரில்லை
அரிந்தவர் யாரும்
புரிவாரில்லை
தான் தோன்றி
சுயம்பிற்கெல்லாம்
தான்தானே பெயர் சூட்டி
விஞ்ஞாணம் வியப்பென்பார்
விஞ்ஞானி கடவுளென்பார்
ஆக்க துப்பிண்றி
அழித்தலுக்கு வழி வகுக்கும்
விஞ்ஞான
மூடர் குலமே
ஒன்றிர்கும் ஒப்பாத
பொய்யில் தப்பாத
தப்பான புரிதலுடன்
தப்பு தப்பாய் ஆராய்ந்து
எம் குலத்தை
வேரருக்க துணிந்தையோ
யாதொருவன்
யாதொன்றும்
யாதெனினும்
படைப்பாரும் அல்ல
விதியதனை தடுப்பாரும் அல்ல
இயற்கையும் இயல்பும்
ஏற்க வேண்டிய ஒன்றேயன்றி
வேறெதுவும் வழியில்லை
தேடி தேடி ஒடும்
மானுடமே
தேடலை வெளியே அல்லாமல்
உன்னுள்ளே தேடு
Comments
Post a Comment