Agri loan ராஜஸ்தான்

ராஜஸ்தானில் ரூ.8,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: வசுந்தரா ராஜே
Tuesday, 13 Feb, 2.46 am
ராஜஸ்தானில் ரூ.8,000 கோடி மதிப்பிலான விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநிலத்தின் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், மாநில நிதியமைச்சருமான வசுந்தரா ராஜே திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிறு, நடுத்தர விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனில் தலா ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயக் கடன் நிவாரண ஆணையத்தை மாநில அரசு ஏற்படுத்தவுள்ளது.
இந்த ஆணையத்தை விவசாயிகள் அணுகி, தங்கள் கோரிக்கை மனுவை அளித்து, கடன் தள்ளுபடி பெறலாம்.
இந்த விவசாயக் கடன் தள்ளுபடியால், அரசுக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும்.
இதேபோல், 80 வயதுக்கு அதிகமான வயதுடையோருக்கு மாநில அரசுப் பேருந்துகளில் இலவச பயண சலுகை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் செல்லும் ஒரு நபருக்கு அரசு பேருந்தில் பாதி கட்டணத்தை மட்டும் செலுத்தும் சலுகையும் அளிக்கப்படுகிறது.
அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள ராம்நிவாஸ் தோட்டம் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர்-தில்லி சாலை வரையிலும் பாதாள சுரங்கப் பாதை அமைக்கப்படும். பசுக்கள் பராமரிப்பு செய்யப்படும் கோசாலைகளில் இயற்கை எரிவாயுக் கலன்கள் அமைக்கப்படும்.
சமூகநலம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.44,135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விவசாயம் சார்ந்த தொழில்களையும், சேவைகளையும் ஊக்குவிக்கும் வகையில், வட்டி மானியம் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. விவசாயம், குடியிருப்பு, வர்த்தக நிலம் உள்ளிட்டவை மீதான பத்திரப்பதிவு வரியில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஜிஎஸ்டியின் கீழ் மாநிலத்தில் 1.81 லட்சம் புதிய நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதனால் வாட் வரிவிதிப்பு காலக்கட்டத்தில் இருந்ததைவிட தற்போது வரி செலுத்துவோர் எண்ணிக்கை ராஜஸ்தானில் அதிகரித்துள்ளது என்று வசுந்தரா ராஜே கூறினார்.
எதிர்க்கட்சியினர் அமளி: இதனிடையே, விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வசுந்தரா ராஜே வெளியிட்டதும், பேரவையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அக்கட்சியின் மூத்த தலைவர் ராமேஸ்வர் டுடி தலைமையில் அமளியில் ஈடுபட்டனர்.
விவசாயக் கடன் முழுவதையும் மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், பகுதியளவு மட்டும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

Comments

Popular posts from this blog

வெற்றி

கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறை

கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்