அதிகாலை

அதிகாலை
கதிரவனைக் கண்டவுடன் கரைந்தோடக் காத்திருக்கும் பனித்துளி💥
உதிரம் உருக்கி வயல் உருவாக்க
ஏர்தூக்கிச் செல்லும் உழவர்👣
உலர்ந்திடாத முடி கொண்ட கொண்டையுடன் கோலம் போடும்
பெண்கள்💇
அலர்ந்தது சிவத்திற்கா, சவத்திற்கா
என்று தெரியாமல் பூத்திருக்கும்
ரோஜாக்கள்🌹
உதிர்ந்து விடுவோம் பெண் மேக
கூந்தலேறி என தெரிந்தும் வான் மேகம் நோக்கி சிரிக்கும் பூக்கள்🌸🌸
குதிர் மேலிருந்து கூவி ஊரை எழுப்பும் சேவல்கள்🐓🐓
கதிர் ஒளியில் குஞ்சுகளுக்கு இரை
தேட சங்கீதம் பாடி பறந்து போகும் பட்சிகள்🐧🐧🐧
இந்த அதிகாலை வேளை சந்தோஷங்கள் எவ்வேளையும்
கிடைத்தால் மனம் மகிழுமே🙏🙏🙏

Comments

Popular posts from this blog

வெற்றி

கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறை

கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்