Posts

Showing posts from February, 2018

அதிகாலை

அதிகாலை கதிரவனைக் கண்டவுடன் கரைந்தோடக் காத்திருக்கும் பனித்துளி💥 உதிரம் உருக்கி வயல் உருவாக்க ஏர்தூக்கிச் செல்லும் உழவர்👣 உலர்ந்திடாத முடி கொண்ட கொண்டையுடன் கோலம் போடும் பெண்கள்💇 அலர்ந்தது சிவத்திற்கா, சவத்திற்கா என்று தெரியாமல் பூத்திருக்கும் ரோஜாக்கள்🌹 உதிர்ந்து விடுவோம் பெண் மேக கூந்தலேறி என தெரிந்தும் வான் மேகம் நோக்கி சிரிக்கும் பூக்கள்🌸🌸 குதிர் மேலிருந்து கூவி ஊரை எழுப்பும் சேவல்கள்🐓🐓 கதிர் ஒளியில் குஞ்சுகளுக்கு இரை தேட சங்கீதம் பாடி பறந்து போகும் பட்சிகள்🐧🐧🐧 இந்த அதிகாலை வேளை சந்தோஷங்கள் எவ்வேளையும் கிடைத்தால் மனம் மகிழுமே🙏🙏🙏

தேன்

தேன் தேனீக்கள் தந்த தெவிட்டாத திரவியமே நினைக்கும்போதே இனிக்கின்றநிலையான அமுதே மருத்துவகுணம் கொண்ட மகத்தான பொருளே மலருக்குள் மறைந்திருக்கும் மன்மத இரகசியமே....

நதிகளை இணைப்போம்

நதிகளை இணைப்போம் நதிகளை இணைப்போம் நாட்டை பசுமை ஆக்குவோம் நாலாயிரம் தலைமுறைகள் நன்றாக சொல்லி கொள்கிறோம் நடப்பதில்லையே பூனைக்கு மணி கட்டுவது யாரு புதிய பாரதம் படைப்பது யாரு புதியவருக்கு வாக்கு அளிப்பது யாரு...

வெற்றி

வெற்றி வாழ்க்கை என்ற வட்டத்திற்குள் ஒளிந்து வாழும் மனிதனே , இன்னும் எத்தனை காலம் தான் இப்படி வாழ வேண்டும் என்ற யோசனை ??? வட்டத்திற்கு வெளியே கொஞ்சம் பார், நீ வாழ்கையில் சந்திக்க வேண்டியவை இன்னும் எத்தனை என்பது தெளிவாய் உனக்கு புரியும் ..... சுவருக்குள் அடைந்து கிடப்பது வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி சாதனை படைப்பது தான் சிறந்த வாழ்க்கை .... சாதித்த மனிதர்கள் சோதனையை சாதனையாக மாற்றியவர்கள் .... சிந்தித்து பார் .... சாதனைகளை நிகழ்த்த வயது ஒரு தடை இல்லை என்பது நன்றாக விளங்கும் .... சோதனைகளை கண்டு துவண்டு போக மனிதன் பிறக்க வில்லை .... அந்த சோதனைகளை சாதனையாக மாற்ற பிறந்தவனே மனிதன் .... அடிமேல் அடி எடுத்து வை ... நம்பிக்கையுடன் போராடு சாதனை கூட ஒரு நாள் உனது தோள் மீது அமர்ந்து இருக்கும் .... நீயும் இருப்பாய் சாதனையாளர் பட்டியலில் .... விடா முயற்சியோடு போராடு வெற்றி என்றும் உன் பக்கமே .....

உலக சாதனை

உலக சாதனை பதினேழு வயதில் நோபல் பரிசு ஆயிரம் கின்னஸ் சாதனைகளும் அதற்கு இணையாகாது கும்பலைக் கூட்டி உயிருக்கு இணையான நேரத்தை விளம்பரத்தோடு வீணடித்து கின்னஸ்சில் இடம்பெறும் சாதனைகளால் யாருக்கும் எந்தவிதப் பயனுமில்லை. சின்னப்பெண் மலாலாவின் சிந்தனைபோல் வளர்ந்தவரின் சிந்தையிலும் உதிக்கவேண்டும் நேரத்தைக் கொள்ளையிடும் வேடிக்கையை இனிமேலும் செய்யாதீர் வாடிக்கையாய் சமுதாயம் முன்னேற வழிகாட்டும் சாதனைகள் படைத்திட விழித்தெழுவீர்!

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அப்துல் கலாம் இந்தியத் தாயின் முகம். இந்தியாவின் முகவரி. நம் நாட்டின் வடக்கே இமயமலை கிழக்கே அப்துல் கலாம். நடமாடிய விஞ்ஞானம் தந்தை தெரஸா இந்தியாவின் ரியல் சூப்பர் ஸ்டார். இந்தியாவை தலைநிமிரச் செய்த இமயத் தமிழன். மனித நேயம் மிக்க மகத்துவ தேசத்தை மண்ணில் சமைக்க சுற்றிச் சுழன்ற மனிதத் தேனி. அவர் உள்ளத்தில் முளைத்த ஏவுகணை விண்ணைத் துளைத்தது. நெருப்பை - இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏற்றிய நெம்புகோல். வல்லரசு விதை மண்ணில் விழுந்திருக்கிறது. விரைவில் அக்னிச் சிறகு முளைத்து அகிலம் போற்றும் வல்லரசு விருட்சம் வளரும். அதற்கு இந்தியனாய்த் தோள் கொடுப்போம். துணை நிற்போம். கேப்டன் யாசீன்.

துணிந்து வாழ்

துணிந்து வாழ் நம்மை ஒதுக்கியவர்களுக்கும், ஒதுக்குபவர்களுக்கும் முதலில் நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்கள் ஒதுக்கியதால் தான் நாம் தனித்துவம் விளங்குகிறோம். இன்று அஸ்தமித்த சூரியன் நாளை உதிக்கும் என்பதை மறவாதே! கடந்து கொண்டே இரு. யார் வென்றாலும் தோற்றாலும் பூமி நிற்காது என்பதை புரிந்து கொள். உன்னுடைய தனித்துவ பாதையில் நடைபோடு. விதியென்று நொந்து கொள்ள எதுமில்லை. மதி கொண்டு வெளியே வா. மயக்கம் தவிர்த்து நல்மதி கொண்டு போராடு. உன் வாழ்க்கை என்றும் உன்னோடு. அதோடு எதற்கு தகராறு? பழி உணர்வை அழித்திடு. பசியைப் போக்க உணவை அளித்திடு. ஒவ்வொரு நொடியும் கொண்டாடு. நட்சத்திரங்களைப் போல் இருந்தாலும் வானத்தின் அங்கமாய் ஒளிர்ந்திடு. மனதின் அளவை விரித்திடு. புன்னகை சிந்த தயங்காதே. புத்தொளி பிறக்கும் மறவாதே. ஞமிறுகளின் சொற்களை காதில் வாங்காதே. சூரியனை உன் வழிகாட்டியாக்கிடு. குளிர் சந்திரனும் துணைவருவான். இருளெங்கும் நீங்கும் ஒளி உன்னிலிருந்து பரவட்டும். புது உலகத்தில் நாளைய தலைமுறை ஆனந்தமாய் வாழட்டும். நீ கவனம் கொண்டால் முடியாது எதுவுமில்லை. துணிவை தாரக மந்திரமாக்கு. உன் துணிவ

பிரபஞ்சம்

பிரபஞ்சம் பிரபஞ்சம் யாதெனினும் யாதொருவர் யாதும் அறிவார் யாயினும் அவர் யாதும் அறியார் கோள சதுர வட்ட மெனும் கோள் வடிவம் இவையெனவே பல நிறம் பூசி பூசி கற்பணை கட்டவிழ்ப்பார் உண்மையை விட்டொழிப்பார் ஆதி அந்தம் அரிவாரில்லை அரிந்தவர் யாரும் புரிவாரில்லை தான் தோன்றி சுயம்பிற்கெல்லாம் தான்தானே பெயர் சூட்டி விஞ்ஞாணம் வியப்பென்பார் விஞ்ஞானி கடவுளென்பார் ஆக்க துப்பிண்றி அழித்தலுக்கு வழி வகுக்கும் விஞ்ஞான மூடர் குலமே ஒன்றிர்கும் ஒப்பாத பொய்யில் தப்பாத தப்பான புரிதலுடன் தப்பு தப்பாய் ஆராய்ந்து எம் குலத்தை வேரருக்க துணிந்தையோ யாதொருவன் யாதொன்றும் யாதெனினும் படைப்பாரும் அல்ல விதியதனை தடுப்பாரும் அல்ல இயற்கையும் இயல்பும் ஏற்க வேண்டிய ஒன்றேயன்றி வேறெதுவும் வழியில்லை தேடி தேடி ஒடும் மானுடமே தேடலை வெளியே அல்லாமல் உன்னுள்ளே தேடு

முதுமை

முதுமை முதுமைக்கும் இறப்பிற்கும் இடையில் - முட்பாதையில் செருப்பின்றி நகர்கிறது வாழ்க்கை... ஆதரவு தந்து அழைக்கிறது முதியோர் இல்லம்...

வாழ்வில் ஜெயித்தவன்

வாழ்வில் ஜெயித்தவன் வாழ்க்கையின் தேவையை தேடி தேடி அலையாமல் இந்த நிமிடம் கிடைப்பவையை தன்னுடைய தேவைக்காக மாற்றிக்கொள்பன் மட்டுமே வாழ்க்கையை வெல்கிறான்......

Agri loan ராஜஸ்தான்

ராஜஸ்தானில் ரூ.8,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: வசுந்தரா ராஜே Tuesday, 13 Feb, 2.46 am ராஜஸ்தானில் ரூ.8,000 கோடி மதிப்பிலான விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநிலத்தின் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், மாநில நிதியமைச்சருமான வசுந்தரா ராஜே திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சிறு, நடுத்தர விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனில் தலா ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயக் கடன் நிவாரண ஆணையத்தை மாநில அரசு ஏற்படுத்தவுள்ளது. இந்த ஆணையத்தை விவசாயிகள் அணுகி, தங்கள் கோரிக்கை மனுவை அளித்து, கடன் தள்ளுபடி பெறலாம். இந்த விவசாயக் கடன் தள்ளுபடியால், அரசுக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும். இதேபோல், 80 வயதுக்கு அதிகமான வயதுடையோருக்கு மாநில அரசுப் பேருந்துகளில் இலவச பயண சலுகை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் செல்லும் ஒரு நபருக்

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் CONTENTS சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம், நீர், காற்று) பாதிக்கப்பட்டு இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர். சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும். கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என எல்லா பாட பிரிவுகளில் கற்றல் செயலாக இணைப்பத

கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறை

கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது. இந்த உத்திகள் பகுதியளவில் கற்பவரின் இயல்பின் அடிப்படையிலும், பகுதியளவில் கற்பிக்கப்படும் பாடப்பொருளின் அடிப்படையிலும். அமைந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறை பொருத்தமானதாக மற்றும் செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அது கற்பவரின் தன்மையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். கற்பவரின் இயல்பிற்கும், பாடப்பொருளின் தன்மைக்கும் ஏற்ப கற்பித்தல் முறைகள் வடிவமைக்கப்படவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவும் வேண்டும். [1] இன்றைய பள்ளிகள் பகுத்தறிதலை  ஊக்குவிக்கவும், படைப்பாற்றலை  வளர்க்கவும் செய்கிறது. கற்பிப்பதற்கான அணுகுமுறைகள் பொதுவாக ஆசிரியர் மைய  முறையாகவும் மாணவர் மைய  முறையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன .ஆசிரியர் மைய முறையில் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை மெளனமாக கேட்டு கற்றலில்  ஈடுபடுவர்.ஆசிரியர்கள் மைய கற்பித்தல் அணுகுமுறையில், ஆசிரியர்கள் அதிகார மையங்களாக விளங்குகிறார்கள். தேர்வு (Test) மற்றும் மதிப்பீட்டின் (Evaluation)

கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்

கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் CONTENTS தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன? கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு வானொலி, தொலைக்காட்சி - கல்விக்கு எப்படி உதவிகரமாக இருக்கின்றன? கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன? தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா? உங்கள் பள்ளிக்கு தேவையான சரியான தொழில்நுட்பக் கருவிகளை தேர்ந்தெடுப்பது, கல்வி மேம்பாட்டிற்கு, தகவல் தொடர்பு நுட்பங்களை (ICT) பயன்படுத்துவதின் முக்கிய படி.  இந்தப்பிரிவில், கல்விமுறையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன? வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம் பிறருக்கு அணுப்புதல், சேமித்தல், புதிதாக உருவாக்குதல், வெளிப்படுத்துதல், பரிமாறிக் கொள்ளுதலே - தகவல் தொடர்பு நுட்பம் என்பதாகும். இந்த நுட்பத்தில் வானொலி, தொலைக்காட்சி, படக்காட்சி, டி.வி.டி., தொலை

இயற்கை உரம் தயாரித்தல்

இயற்கை உரம் தயாரிப்பது எப்படி? வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இயற்கை உரம் என்பது விவசாயக் கழிவுகளான உமி, கிளை, இலைதழை, புல், கொட்டை, பழம் ஆகியவற்றிலிருந்தும், சமையலறைக் கழிவுகளான வீடு, உணவகம் மற்றும் சந்தையிலிருந்து கிடைப்பவற்றிலிருந்தும், விவசாய தொழிற்துறைக் கழிவுகளான உணவுத் தொழில் நுட்பம், தோல், விதை, தண்டு, பழம், காய்கறி, சக்கை போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. வீட்டில் இயற்கை உரம் தயாரித்தல் ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது தொட்டி (மண், சிமிண்ட், பிளாஸ்டிக்) எடுத்துக் கொள்ளவும். அதன் அடியில் சிறு துவாரங்கள் இட வேண்டும். துவாரமானது காற்றோட்டத்திற்கும் அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதற்கும் உதவும். பின் அதில் ஒரு இஞ்ச் உயரத்திற்கு சிறு சிறு கற்களை பரப்பவும். அதன் மீது ஒரு இஞ்ச் உயரத்திற்கு மணலைப் பரப்பவும். அதன் மீது ஒரு இன்ச் உயரத்திற்கு அந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணைப் பரப்பவும். அதன் மீது தினமும் சேரும் சமையலறைக் கழிவுகள், காய்ந்த இலை சருகுகள், கிழிந்த தாள்கள் (தாள்களை தண்ணீரில் நனைத்து தொட்டியில்